சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு 35 கோடி ரூபாய் மதிப்பிலான DELL நிறுவன லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களோடு வந்த கண்டனரை துறைமுகத்திலிருந்தே கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்த போலீசார், போலி ஆவணங்கள் தயாரித்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட துறைமுக டெர்மினல் மேனேஜரை வலைவீசி தேடி வருகின்றனர்..