முதலீடுகளுக்காக அமெரிக்கா சென்றாரா? அல்லது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றாரா? என்ற பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எவ்வளவு கோடி முதலீடுகள் செய்யப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.