முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்குள்ள தமிழ்ச்சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், உங்களுக்குள் எந்த பிளவும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என அறிவுரை கூறியதோடு, ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குடும்பத்துடன் வாருங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் அமெரிக்க வாழ் தமிழர்களின் நல்வாழ்வு சிறக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.