டிட்வா புயல் எச்சரிக்கையை அடுத்து தயார் நிலையில் இருக்குமாறு திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.மக்களுக்கு உதவி செய்ய தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்.மக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.டிட்வா புயல் தொடர்பான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்.அனைத்துத் துறைகளும், முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.