முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். அக்டோபர் 4-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, மதுரை திருச்சி, கோவை என 5 இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த போட்டியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான இந்த விளையாட்டு போட்டியில் கால்பந்து, ஹாக்கி, தடகளம் என 25 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.