பயங்கரவாத செயலில் ஈடுபட்டவருக்கு எதிரான கைது நடவடிக்கைக்காக, தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட 3 முக்கிய பயங்கரவாதிகளை ATS படையினர் கைது செய்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.