இஸ்லாமிய பண்டிகையான மிலாதுன் நபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திக்குறிப்பில், மனிதர்களிடையேயான வேற்றுமைகள், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் என புகழாரம் சூட்டினார்.இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகளை திமுக அரசு அன்புடன் செவிமடுத்து நிறைவேற்றி வருவதாகவும், வக்ஃப் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவற்றால் உரிமைகள் பாதிக்கப்படும் போது நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து உறுதியாக நிற்கும் எனவும் தெரிவித்தார்.