சென்னையில் ஓடும் ஆறுகளை சீரமைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சென்னையின் ஓடும் முக்கிய ஆறுகளான கூவம், கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆகியவற்றை சீரமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.