அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ((Illinois)) , அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையில் தோன்றினார். அயலக தமிழர்கள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சருக்கு மேள- தாளங்கள் முழங்க அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பறை இசை, கரகாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், அதனை முதலமைச்சர் கண்டு ரசித்தார்.