கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமது அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து துயரில் பங்கெடுத்தவர்கள் மற்றும் தொலைபேசியில் ஆறுதல் கூறிய ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.