தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இதில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 25 முதல் 50 சதவீதம் வரை மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு சுகாதார துறையின் மருந்துகள் சேவைகள் கழகம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளன.