பல்வேறு துறையின் புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். காவல்துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலும், தீயணைப்புத்துறையின் சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அவர் திறந்து வைத்தார். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 113 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 மாவட்ட அரசு மாதிரி பள்ளிக் கட்டடங்கள் மற்றும் விடுதி கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார். இதோடு, 20 மாவட்டங்களில், 60 அரசுப் பள்ளிகளில் 96 கோடியே 49 லட்சம் மதிப்பில் 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 ஆய்வகக் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.