துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவித்தது, முதலமைச்சரான தனக்குத் துணையாக இருப்பதற்கு அல்ல, நாட்டு மக்களுக்குத் துணையாக இருப்பதற்கே என தெளிவுப்படுத்தியுள்ளார். அதேபோல் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட துறையை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் கவனித்து, அத்துறையின் மூலமாக மாநிலத்தை வளப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.