வரும் 25 மற்றும் 26ஆம் தேதி கோவை, ஈரோடு மாவட்டங்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். அத்துடன் 25ஆம் தேதி கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஈரோடு செல்லும் முதல்வர், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முன்னதாக, மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானின் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.இதையும் பாருங்கள் - உடன்பிறப்பே வா - 100 தொகுதிகள் நிறைவு | CM MK Stalin news today | DMK