திருநெல்வேலி அல்வாவை விட மத்திய அரசு மாநிலங்களுக்கு தரும் அல்வா ஃபேமஸாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்த தனது எக்ஸ் பதிவில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரக்கூடிய மாநிலங்களுக்கும் மட்டுமே நிதி ஒதுக்குவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.