ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கே ஒதுக்கலாமா? அல்லது திமுக சார்பில் வேட்பாளரை களமிறக்கலாமா என்பது குறித்து ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.