சத்தீஸ்கரில் திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, நடிகை சன்னி லியோன் பெயரில் போலியாக வங்கிக் கணக்கு துவக்கி மாதந்தோறும் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர் பிடிபட்டார். பஸ்தார் மாவட்டம் தாலுர் கிராமத்தில் உள்ள ஒரு பயனாளியின் பெயர் சன்னி லியோன் என்றும் அவரின் கணவர் பெயர் ஜானி சின்ஸ் என்றும் இருந்தது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.