சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை- மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. காலை 10:15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட்டின் ஆரம்ப விலை ஆயிரத்து 700 ரூபாயாகவும், அதிகபட்ச விலை 7 ஆயிரத்து 500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.