தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சென்னையை சேர்ந்த 5 இளைஞர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார்.சென்னை, எழும்பூர் நேரு பூங்கா அருகே உள்ள ஹவுசிங் போர்ட் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான பிராங்கிளின், ஆண்டோ தங்களின் நண்பர்களான கிஷோர், கலைவேந்தன், மனோகரன் உள்ளிட்டோருடன் கடந்த 6 ம் தேதி நாகை வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர்.இதில் நீரில் மூழ்கிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்ட நிலையில், அவர்களின் உடல்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.