மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட NIRF-2025 தரவரிசைப்படி, சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(NIRF) 2024ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையானது கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, பட்டப்படிப்பு முடிவு, புதுமை நடைமுறை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.கடந்த 2016ஆம் ஆண்டு முதல், இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த பிரிவில், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம்(IIT) தொடர்ந்து 7ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இந்தப் பட்டியலில் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. மேலும், பொறியியல் பிரிவில், 10ஆவது ஆண்டாக, ஐஐடி மெட்ராஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஆறு இடங்களை இந்திய தொழில்நுட்பக் கழகங்களே (ஐ.ஐ.டி) பெற்றுள்ளன.இந்த தரவரிசையில் இடம்பெற்ற முதல் 10 கல்வி நிறுவனங்களின் பட்டியல்:1. சென்னை ஐஐடி - சென்னை, தமிழ்நாடு2. இந்திய அறிவியல் நிறுவனம்(ஐஐஎஸ்சி) பெங்களூரு - கர்நாடகா3. மும்பை ஐஐடி - மும்பை, மகாராஷ்டிரா4. டெல்லி ஐஐடி - புது டெல்லி5. கான்பூர் ஐஐடி - உத்தரப் பிரதேசம்6. கரக்பூர் ஐஐடி - மேற்கு வங்கம்7. ரூர்க்கி ஐஐடி - உத்தராகண்ட்8. எய்ம்ஸ் - புது டெல்லி9. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) - புது டெல்லி10. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - வாரணாசி, உத்தரப் பிரதேசம்மாநில பொது பல்கலைக்கழகங்கள் டாப்-10 தரவரிசையில் ஜடவ்பூர் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.