மூன்றாயிரத்து 500 கோடி ரூபாய் மதுபான ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிகையில், ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் பணப்பலன் பெற்றதாக மாநில அரசின் சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி முன்னாள் துணை முதலமைச்சரும், கலால்துறை அமைச்சருமான நாராயணசுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.