கரூர் மாவட்டத்திற்கு, தவெக தலைவர் விஜய் செல்லும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, வரும் 13ஆம் தேதி விஜய் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த பயணம் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு அருகே உள்ள தனியார் மண்டபத்தில், பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர் அறிவித்த இழப்பீடு தொகையையும் வழங்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.