தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மிசோரம், கேரளா, பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்