முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இந்தி உட்பட 17 மொழிகள் கற்றதால் தான் சிறந்த தலைவர் ஆனார் என இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்த ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபுவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மொழி வாரி மாநிலங்கள் உருவாக காரணமான ஆந்திரத்தின் முதல்வர் சந்திரபாபு இப்படி பேசலாமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.