சூடானில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை, அந்நாட்டு ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். 'கடவுள் மிகப்பெரியவர்' என்ற முழக்கங்களுடன், அதிபர் மாளிகை முழுதும் ராணுவ வீரர்கள் சுற்றி வருவது, அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.