தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவானது, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி. நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் கணிப்பு.குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என கணிப்பு.26ஆம் தேதி அன்று மேலும் வலுப்பெறக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் எனவும் கணிப்பு.டெல்டா மற்றும் தெற்கு என 16 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.மதுரை தொடங்கி கன்னியாகுமரி வரை நாளை கனமழை பெய்யக் கூடும் என்றும் கணிப்பு.