தமிழகத்தில், இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 5ஆம் தேதியான இன்று, வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவதி:பரவலாக பெய்த மழை காரணமாக, சென்னை திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, புறநகர் பகுதியில் பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், சென்னீர்குப்பம், வேலப்பன்சாவடி, பாரிவாக்கம் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, ஆங்காங்கே தாழ்வான பகுதிகளிலும் முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. இந்நிலையில் வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலை தனியார் கல்லூரி அருகே மழை வெள்ளமானது, நீச்சல் குளம் போல் தேங்கி காட்சியளித்து வருகிறது. அதில் பயணிக்க கூடிய கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மிதந்தவாறு செல்கின்றன. அந்த சாலையில் அமைந்துள்ள லாரி ஷோரூம் முன்பு குளம் போல் மழை நீர் தேங்கி நிற்பதால், மழை நீர் உள்ளே புகாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை வாசலில் அடுக்கி வைத்துள்ளனர்.இதையும் பாருங்கள் - Weather Update | வலுப்பெற்ற புயல் சின்னம், தமிழகத்தில் எங்கெல்லாம் அலர்ட், கன மழை காத்திருக்கு நண்பா