சாம்பியன் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றது. ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலம் வாய்ந்த அணியாக உள்ளதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.