GST மீது மத்திய அரசு விதிக்கும் சர்சார்ஜ் மற்றும் செஸ் வரி விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதாகவும், இதன் காரணமாக மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைந்து வருவதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 16 ஆவது நிதிக் குழு தொடர்பான பாஜக அல்லாத ஐந்து மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், இதை சுட்டிக் காட்டினார்.சர்சார்ஜ் மற்றும் செஸ் வரி உயர்வு குறித்து16 ஆவது நிதிக் குழு கவனத்தில் எடுக்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தினார்.மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 41 ல் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்துமாறு பல மாநிலங்கள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.