குறிப்பிட்ட காட்சியை நீக்க சம்மதம் தெரிவித்ததையடுத்து நடிகை கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டதை காண்பிக்கக் கூடாது என கங்கனா ரனாவத்துக்கு சீக்கிய அமைப்பினரால் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் மத்திய தணிக்கை குழு, படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.