வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ரயில் நிலையங்களின் நடைபாதை மற்றும் சிறிய ஸ்டேஷன்களில் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. ஓடும் ரயிலில் கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தை தொடர்ந்து, பெண் பயணிகளுக்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.