தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் 98 சதவீதம் நிறைவுற்றதாக, அம்மாநில மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சேகரிக்கப்பட்ட சாதி வாரி தரவுகள் அடிப்படையில் பஞ்சாயத்து, சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் அந்தந்த சமூகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என உறுதியளித்தார்