’அரசன்’ பட Promo வெளியான நிலையில், சோசியல் மீடியாவில், பெரிய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறார் STR. அதிலும், ’நம்ம வேஷத்துல தனுஷை நடிக்க வைங்க சார், சூப்பரா Performance பண்ணுவாரு’ என்று பேசி, பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்போதைக்கு கோலிவுடில் Talk of the town சிம்பு தான். ’தக் லைஃப்’ படத்துக்கு பிறகு வெற்றிமாறனின் இயக்கத்தில், கை கோர்த்திருக்கும் நடிகர் சிம்பு, மிகவும் பிசியாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் - சிம்பு காம்போவில் உருவாகும் இந்த படத்தில் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் உள்ளிடோர் நடிக்க, ராக் ஸ்டார் அனிருத் மியூசிக். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் படம் உருவாகி வரும் நிலையில், படத்தின் அப்டேட்ஸ் வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தான், படத்தின் புது ப்ரொமோ வெளியாகி பெரிய பேசுபொருளாக மாறி உள்ளது. அடிப்படையில், வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், இரு வேறு கால கட்டத்தில் Different ஆன இரண்டு Lookல் வந்து மிரட்ட உள்ளார் சிம்பு. விஜயகாந்த் நடித்த ’கேப்டன் பிரபாகரன்’ படம் ரிலீஸான போது, அதாவது 1991ஆம் வருடம் வடசென்னையில் நடைபெற்ற மிகப்பெரிய Assault, ப்ரொமோ காட்சிகளில் இடம்பெறுகிறது. அந்த சமயத்தில், கொலை செய்யும் சிம்புவின் கேரக்டர், Current Periodல் கொலையே பண்ணவில்லை என்று மறுக்கிறது. 1991லும், நடப்பிலும் கதை நகர்வது போல் காட்டப்படும் சூழலில், கோர்ட்டுக்கு வெளியே நின்று நெல்சனிடம் பேசும் சிம்பு, காமெடி பண்ணி கிச்சுகிச்சு மூட்டுகிறார். கடைசியாக, ’நான் சொல்கிற கதையை அப்படியே எடுத்துடாதீங்க, இது முழுக்க முழுக்க கற்பனை கதை’ என்று Disclaimer போட்டுக்கோங்க’ என்று சொந்த கதையை சொல்கிறார் சிம்பு. மேலும், ’என்னோட கேரக்டரில் யாரை நடிக்க வைக்க போறீங்க’ என்று சிம்பு கேட்க, ’உன்னை மாதிரியே யாராவது இருப்பாங்களே’ என்று சொல்கிறார் நெல்சன். உடனே, ’தனுஷை நடிக்க வையுங்க சார், Performance சூப்பரா பண்ணுவாரு’ என்று சொல்லிட்டு கோர்ட்டுக்குள் செல்கிறார் சிம்பு. ஒரு சமயத்தில், Simbu vs Dhanush என்று, இரு தரப்பு ரசிகர்கள் மோதல் நீடித்த நிலையில், தனுஷை பாராட்டி சிம்பு பேசியிருக்கும் வசனம் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ’சக நடிகராக எந்தவொரு ஈகோவும் இல்லாமல் தனுஷை பாராட்டி பேசியிருக்க சிம்புவின் செயலுக்கு வாழ்த்துக்கள்’ என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதைத் தாண்டி, எல்லோரும் தனுஷின் வடசென்னை Part-2 தானே கேட்டுட்டு இருந்தோம். ஆனால், வடசென்னையின் Upgraded Part எடுத்துட்டு இருக்காருப்பா நம்ம வெற்றி என்று, வெற்றிமாறனையும் சிலாகிச்சுட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.