கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கொள்கை வகுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் விளக்கம் அளிப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. நடப்பாண்டில், கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது.