பெரியார் சிலையை உடைப்பதாக பேசியதாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிராக தொடர்பாக வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைக்கும் நாள்தான் இந்துக்களின் எழுச்சி நாள் என பேசியிருந்தார். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனல் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.