2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை டுப்ளெஸி தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் - செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணி, 18.1 ஓவரிலேயே 139 ரன்கள் எடுத்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.