ஸ்கார்பியோ N மாடலின் கார்பன் எடிஷனை மஹிந்திரா கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது . டாப் எண்ட் மாடலான Z8 மற்றும் Z8 L வேரியன்ட்களை மட்டும் அடிப்படையாக கொண்டு 19 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் முதல் 24 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் கார்பன் எடிஷன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.உட்புறம் முதல் வெளிப்புறம் வரை முழுவதும் கருப்பு நிறத்தாலேயே கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது.