அமெரிக்காவில் வானில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காரின் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது. கலிபோர்னியாவில் செயல்படும் இந்த நிறுவனம், தரையில் ஓடும் வகையிலும் வானில் பறக்கும் வகையிலும் காரை வடிவமைத்துள்ளது. முதல் கட்ட சோதனை நிறைவடைந்த நிலையில் புதிய பொருளாதார புரட்சியை இந்த கார் ஏற்படுத்தும் என அந்நிறுவன சிஇஓ நம்பிக்கை தெரிவித்தார்.