டெல்லி செங்கோட்டையில், கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் நான்காவது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அருகில் உள்ள கட்டடங்களில் ஏறி, சிதறிய உடற் பாகங்களை சேகரித்ததோடு, புகைப்படம் எடுத்தும் போலீசார் தொடர் சோதனை நடத்தினர். இந்நிலையில், டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய சிசிடிவியில் பதிவான கார்வெடிப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. போக்குவரத்து நெரிசலில், வெள்ளை நிற ஹுண்டாய் கார் வெடித்ததும் அருகில் இருந்த வாகனங்கள் தீப்பற்றிய காட்சி, சிசிடிவி பதிவில் இடம் பெற்றுள்ளது.