கனடாவில், பனிக்காலம் தொடங்கிய நிலையில், நிலம் முழுக்க வெண் பனி படர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில், பருவத்தின் முதல் பனிப்பொழிவை கண்ட கனடாவின் பல நகரங்கள் பனியால் மூடப்பட்டிருந்தன. டொரன்டோ நகரில், முதல் பனிப்பொழிவின் அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பனிப்பொழிவால் போக்குவரத்து தாமதம் ஏற்பட கூடும் என்று, எச்சரிக்கப்பட்டுள்ளது.