டொரண்டோவில் நடைபெற்று வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு அமெரிக்காவின் கோகோ காப் ((Coco Gauff)) முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் சக நாட்டவரான டேனியல் காலின்ஸ் ((Danielle Collins)) உடன் மோதிய அவர், 7க்கு 5, 4க்கு 6, 7க்கு 6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஜூலை 31 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவுடன் ((Veronika Kudermetova)) மோதுகிறார்.