கனடா எந்த வகையிலும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி கூறினார். கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது முதல் உரையை நிகழ்த்திய அவர், நியாமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதிப்பதன் மூலம் கனடாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.