கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், இரும்புக்கு மேலும் 25 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்காவின் மூன்று பகுதிகளுக்கு கூடுதலாக மின்சார வரி விதிக்க கடனாவின் ஒன்டாரியா மாகாண அரசு முடிவு செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடாவின் அலுமினியம் மற்றும் எஃகு மீதான வரியை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றார். இந்நிலையில், வரிகளை கனடாவும் இதுபோல் கைவிடவில்லை என்றால், ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்குள் வரும் கார்கள் மீதான வரியை கணிசமாக அதிகரிக்க போவதாகவும் டிரம்ப் எச்சரித்தார்.