தனியாளாக அண்ணாசாலைக்கு வருவதாக தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.முன்னதாக அறிவாலயத்தின் செங்கல்களை உருவப் போவதாக அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் உதயநிதி, அண்ணாமலையால் அண்ணா சாலைக்கு வர முடியுமா? என சவால் விடுத்திருந்தார்.