ஆந்திராவில் புதிய ஏவுகணை சோதனை நிலையத்தை அமைப்பதற்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆந்திர மாநிலம் நாகயலங்கா பகுதியில் அமையும் சோதனை நிலையத்தில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை உள்ளிட்டவை சோதனை செய்யப்படவுள்ளன.