உயிருக்கு அஞ்சி சிரியாவில் இருந்து தப்பி ஓடிய அதிபர் பஷர்-அல்-அசாத் குடும்பத்துடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளார். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஷர் அல் அசாத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து, அதிபர் பதவியில் இருந்து விலகுவது என அவர் முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.