இந்தியா, அமெரிக்கா இடையிலான வா்த்தகம் 2030-ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலா்களை இலக்காகக் கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, மிக விரைவில் பரஸ்பர நன்மை பயக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும், அமெரிக்காவும் இந்தியாவும் AI துறையில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முக்கிய கனிமங்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்தும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.