இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள பிளாக் மெயில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகும் என வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன், பிளாக் மெயில் திரைப்படத்தை இயக்கி உள்ளார். அதில், கதாநாயகியாக தேஜு அஸ்வினியும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர். டி. இமான் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், பிளாக் மெயில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.