ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீயில் பல்லாயிரம் ஏக்கர் சாம்பலாகி வருகிறது. கடும் வெப்பம் காரணமாக கேசர்ஸ் ((CACERES )) மாகாணத்தில் உள்ள கேபசபெலோசா ((CABEZABELLOSA)) வனப்பகுதியில் பெரும் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. பலத்த காற்றின் காரணமாக பரவி வரும் காட்டுத்தீயை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் லியோன்((LEON ))மாகாணத்தில் வனப்பகுதியையொட்டி வீடுகளில் பற்றிய தீ ஹெலிகாப்டர் மூலம் அணைக்கப்பட்டு வருகிறது.