ஜப்பானில் ஓடும் புல்லட் ரயிலில் ஹாலோவீன் என்று அழைக்கப்படும் பேய் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவையும், ஒசாகாவையும் இணைக்கும் 140 நிமிட புல்லட் ரயில் பயணித்தின் போது, ஜாம்பி போன்று வேடமணிந்தவர்கள் பயணிகளை உற்சாகப்படுத்தினர். ஜாம்பி வைரசால் பாதிக்கப்பட்டது போல தத்ரூபமாக நடித்தவர்களை பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும், புல்லட் ரயிலில் செல்லும் போது, ஹாலோவீன் நிகழ்ச்சியை கண்டது மகிழ்ச்சியாக இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.